Monday, February 18, 2008

நிராகரிப்பு


கொடுங்காற்றில்
அடித்துச் செல்லப்பட்டு
ஏதேனும் மரத்திலோ, சுவரிலோ
ஒட்டிக் கொண்டு..
தற்காலிகமாகத் தன் இருப்பைத்
தற்காத்துக் கொள்ளும்
உணர்வுகளற்ற சருகைப் போலிருக்கிறது..
உன்னிடம் தந்தபோது நீ
கிள்ளி எறிந்த
என் இதயம்.!!

-த‌.பிரபு குமரன்

No comments: