Monday, February 18, 2008

வாழ்க்கைத் தேடல்


காலப் பெருங்கரத்தில்
அகப்பட்ட அட்சய பாத்திரத்தில்
வழிந்து வழிந்து ஒழுகிக்
கொண்டிருக்கிறது வாழ்க்கை.
இயன்றவரை அள்ளிக் கொள்ளும் பேராசை...
இருப்பினும்
விரலிடுக்குகளில் நழுவும்
வாழ்க்கையையும்
பிடித்துக் கொள்ளும் நப்பாசையில்...
தொலைகிறது மீதமும்.!!

-த‌.பிரபு குமரன்

No comments: