Monday, February 18, 2008

நான் நீயாகிறேன்



"உன்னை முதன்முதலில்
ஒரு கண்காட்சியில் பார்த்தபோது
ஒரு குழந்தையைப் போல் குதூகலித்து
பலூன் வாங்கிக் கொண்டிருந்தாய்.
அதன் பிறகு கண்காட்சியை
இரசிக்கவில்லை நான்.!!"

**********
"என் காதலை
உன்னால் மதிப்பிட முடியாது.
எனவேதான்
சொல்வதேயில்லை உன்னிடம்.!!"

**********

"உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
மயிலிறகு குட்டி போடும் என்று
நம்பிக் கொண்டிருக்கும்
பள்ளிச் சிறுவனைப் போல.!!"

**********

"உன் பெயர் வேண்டுமானால்
எழுதியிருப்பேன்...
கணக்கில்லாமல்.
மற்றபடி
கவிதைகள் எழுதிப்
பழக்கமில்லையெனக்கு.!!"

**********

"உன் நிறுத்த‌த்தில்
நீ இற‌ங்கிய‌துமே
வெறுமையான‌தாய்த் தோன்றுகிற‌து..
ம‌ன‌தும்,
கூட்ட‌ம் வ‌ழியும் பேருந்தும்.!!"

**********

"என் க‌ன‌வுக‌ளில்
நீ வ‌ரும்போதெல்லாம்
விழித்துக் கொள்கிறேன்.
த‌ய‌வுசெய்து...
கொலுசுக‌ளைக் க‌ழ‌ற்றி வை.!!"

**********

"உன‌க்காக‌ எழுதிய‌துதான்
என்றாலும்...
உன்னிட‌ம் வாசித்துக் காட்டிய‌
பின்புதான் க‌விதைக‌ளாகின்ற‌ன‌.!!"

**********

"உன‌க்குரிய‌தை உரிமையோடு
நீ எடுத்துக் கொள்ளும்போது
எப்ப‌டிச் சொல்வேன்...
இதய‌த்தைத் திருடி விட்டாய் என்று?!"

**********

-த.பிரபு குமரன்

No comments: