Tuesday, March 18, 2008

காதல் கண்ணாமூச்சி














"என்னைப் பிடிக்கவே பிடிக்காது...
என்றாய்.... உன் மீதெனக்குக்
காதல் வந்த பொழுது.
இருக்கட்டும்...
பிடித்தா சாப்பிடுகிறாய் மாத்திரையை...
காய்ச்சல் வந்த பொழுது?"

"என்னோடு பேசாதே...என்கிறாய்.
போகட்டும்..
கைகள் கோர்த்து,
நடந்தபடியாவது இருப்போம்.!!"

"பொழுது போகவில்லையென
பல்லாங்குழி விளையாடுகிறாய்...
பக்கத்து வீட்டுக் குழந்தையுடன்.
மாறாக. என்னோடு விளையாடேன்..
காதல் கண்ணாமூச்சி.!!"

"எதிர்பாராத நிமிடங்களைப்
பரிசளிக்கிறாய்....
உன் வருகைகளில்.
குழந்தையின் கையில்
திடீரெனத் திணிக்கப்பட்ட
பொம்மையைப் போல.!!"

"பயணங்கள் மிகவும் பிடிக்குமென்றேன்.
பதிலுக்கு.. எனக்கும்தான் என்றாய்.
பின் என்ன யோசனை....
நிறுத்தங்களற்ற
நம் காதல் பயணத்திற்கு.!!"

"என் காதல் உனக்குள்ளும்
வேர் விட்டது.
பிறகு வெட்கங்களாய்ப்
பூக்க ஆரம்பித்தாய்.!!"

"என் மடியில்
குழந்தையாக வேண்டும்
என்கிறாய் நீ.
எனக்கோ...
உன் பெயர் தவிர
வேறெந்தத் தாலாட்டும் தெரியாது.!!"

-த.பிரபு குமரன்

4 comments:

ரூபஸ் said...

//என் மடியில்
குழந்தையாக வேண்டும்
என்கிறாய் நீ.
எனக்கோ...
உன் பெயர் தவிர
வேறெந்தத் தாலாட்டும் தெரியாது//

அழகான வரிகள்...

சிவசுப்பிரமணியன் said...

பிரபு சார் ... எனக்கு நிஜமாவே பயமா இருக்கு.. என்னை உங்கள் கவிதைகள் திரும்பவும் காதலிக்க சொல்கிறது

கோகுலன் said...

//எனக்கோ...
உன் பெயர் தவிர
வேறெந்தத் தாலாட்டும் தெரியாது.!!"
//

மிக ரசனைமிக்க வரிகள்..

புகைப்படமும் மிக அருமை பிரபு!!

Madurai citizen said...

அருமை...
அழகான ரசனை