Thursday, March 6, 2008
நீயும் மருதாணியும்.....
"நீ
பறிக்கும் பொழுது
வெட்கப்படும்
மருதாணி இலைகள்
பின்
உன் விரல்களில்
சிவக்கின்றன.!!"
"உன் ஒவ்வொரு விரலுக்காய்
உருட்டி உருட்டி நீ
மருதாணி இடுகிறாய்.
இருப்பினும்
தன் முறை வருவதற்குள்
ஏங்கிப் பரிதவித்துப் போகின்றன..
சும்மா இருக்கும் விரல்கள்.!!"
"நீ
மருதாணி வைத்திருந்த
நகங்களை
வெட்டிக் கொண்டிருந்தாய்.
தரையில்
குட்டிக் குட்டியாய்
கலர் பிறைகள்.!!"
'நீ ஒரு கையில்
மருதாணி இட்டு விட்டு
மறு கையில் வைக்க முடியாமல்
தவிக்கும் தருணங்களை...
எனக்குப்
பரிசளிப்பாயா?!"
"மருதாணியைப் பார்த்ததும்..
யோசிக்காமல் அழிக்கிறாய்
பார்த்துப் பார்த்து
வாங்கிப் பூசிய
நகச்சாயத்தை.!!"
"நல்லா சிவந்திருக்கா..
நல்லா சிவந்திருக்கா..
கையைக் காட்டி
எல்லோரிடமும் கேட்கிறாய்.
கண்ணாடியில் பாரேன்..
கையா, முகமா என்று.!!"
த.பிரபு குமரன்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பச்சை நிற மருதாணி கூட உன் கை பட்டவுடன் சிவக்குதே!
பச்சை குழந்தை என் மனது
படும் பாடு கேட்கலையோ..
அருமை பிரபு
தொடர்ந்து எழுதுங்கள்
பத்மா
பாராட்டியதற்கும் , ஊக்கப்படுத்தியதற்கும் மனமார்ந்த நன்றிகள் பத்மா.
-த.பிரபு குமரன்
"உன் ஒவ்வொரு விரலுக்காய்
உருட்டி உருட்டி நீ
மருதாணி இடுகிறாய்.
இருப்பினும்
தன் முறை வருவதற்குள்
ஏங்கிப் பரிதவித்துப் போகின்றன..
சும்மா இருக்கும் விரல்கள்.!!"
அருமையான
எனக்கு பிடித்த வரிகள் குமரன் ..அவர்களே ..
வாழ்த்துக்களுடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ...
நீ
பறிக்கும் பொழுது
வெட்கப்படும்
மருதாணி இலைகள்
பின்
உன் விரல்களில்
சிவக்கின்றன.!!"
மருதாணி சிவப்பது வெட்கத்தாலா?
அருமை
Post a Comment