Saturday, March 1, 2008

குமுதம் இதழில் கவிதைகள்-5/3/08



பயம்
-----
வெடித்து விடுமோ
என்ற பயத்திலேயே
பெரிதாக்குவதில்லை.....
பெரும்பாலான
பலூன்களையும்,
பிரச்சனைகளையும்.!!

கோலம்
--------
வீட்டுக்குள் கோலம்...
கலர் கோலத்தை
மிதித்து விட்டு வந்திருந்த
குழந்தைகளின் பாதங்கள்.!!

நம்பிக்கை
---------
சிகப்பு, பச்சை, மஞ்சள் என
வண்ண வண்ணமாய்
கைக்குட்டைகள் விற்கிறார்...
பார்வை தெரியாதவர்.!!

மண்
------
இளம் அப்பாவின்
இறுதிச் சடங்கில்
மண்பானை உடைக்கப்பட்டபோது
குழந்தைக்கு நினைவு வந்தது..
தன் மண் உண்டியல் காசுகளிலும்
அவர் குடித்து விட்டு வந்தது.!!


-த.பிரபு குமரன்.

3 comments:

Unknown said...

kavithai (prabu)kumaran sir.all are super..

பத்மா said...

படித்த போதே யோசித்தேன் அருமை யென இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Prabu said...

பாராட்டிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி பத்மா.

-த.பிரபுகுமரன்