என் குழந்தையும் குதூகலமும்
********************
அப்படி ஒரு குதூகலம்...
அப்படி ஒரு குதூகலம்...
பேருந்தில் ஜன்னலோரமென்றால்.
கேட்கவே வேண்டாம்
இரயில் எனும்போது.
பின்..
மழை பார்த்தால்
மயில் பார்த்தால்
பட்டாசு பார்த்தால்..
பட்டாம்பூச்சி பார்த்தால்
கண்காட்சி பார்த்தால்..
கரடி பொம்மை பார்த்தால்
பலூன் பார்த்தால்..
பபூன் பார்த்தால்..
இன்னும் என்னதான் இல்லை..
என்னிலிருந்து வந்த நீ
உன்னிலிருந்து வரும்
குதூகலத்தைக்
கொஞ்சம் கொடேன்..!!